செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று…. எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்… பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும். ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு தலைவர் போய் வந்ததற்கு, யார் அழைச்சாங்க ? எப்படி அழைச்சாங்க ? என்பது அனாவசியமான ஒரு கேள்வி. தேவையற்ற கேள்விகள். ஒரு புதிய அமைச்சர் பொறுப்பு எடுக்கும்போது அந்த புதிய அமைச்சர் தமிழகத்தை கெடுக்காத வகையில் நிர்வாகம் செய்ய வாருங்கள் என்று நாம் சொல்கின்றோம்.
சிலபேருக்கு கண்டும் காணாமல் இருப்பது கண்பார்வை குறைந்து விட்டது என்று நினைக்கின்றேன். ஆட்சியில் இருப்பவர்கள் அடிக்கும் கூத்து… கோடிக்கணக்கான ரூபாய்கள். நம்முடைய இளைஞர்களை பணையம் வைத்து இவர்கள் அடிக்கும் கூத்து, கோடிகணக்கான ரூபாய்கள்… தமிழகம் அழிந்து கொண்டிருக்கிறது. இதை எச்சரிக்கையாக தமிழக அரசு எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.