Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.28.80 கோடி நிவாரணம் அளித்த 3 இந்திய நிறுவனங்கள்..!

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம், இந்திய நிறுவனத்தின் செயலாளர்கள் நிறுவனம் மற்றும் இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India, Institute of Company Secretaries of India and Institute of Cost Accountants of India) ஆகிய மூன்றும் இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 28.80 கோடி வக்கிழங்கியுள்ளன.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உதவவும் நோக்கத்தில் இந்த நிதி வழங்கப்படுவதாக கார்ப்பரேட் விவகார அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் என்ற அறக்கட்டளை இந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து பல்வேறு பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை நிவாரண நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கணக்காளர் நிறுவனங்கள் சுமார் 20 கோடியை தங்களது பங்களிப்பாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |