Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 கிலோ தங்க நகை…. ரூ20,00,000 திருட்டு…. முகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு மற்றும் நகைக் கடைகளில்  3 கிலோ நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடி அணிந்த கொள்ளையனை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமாரி மாவட்டம்  மார்த்தாண்டம் அருகே வனப் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விஜய் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் பூஜை அறையில் இருந்த 57 சவரன் நகைகள், 20லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்.

அங்கு இருந்த நகைகளை எடுத்துச் சென்ற கொள்ளையன் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகை கடையை திறந்து 3 கிலோ மதிப்பிலான நகைகளை எடுத்து சென்றுள்ளான் இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் நகை கடைகளில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து முகமூடி அணிந்த கொள்ளையனை  தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |