Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”மோட்டார் மற்றும் பேருந்து மோதி விபத்து” கிருஷ்ணகிரியில் 3 பேர் பரிதாப பலி…!!

கிருஷ்ணகிரி தபால்மேடு பகுதியில் பேருந்தும் , இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர்  உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரையடுத்துள்ள தபால்மேடு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருக்கும் போது மல்லப்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த சோமேஸ்வரன் தனது இரண்டு நண்பர்களுடன் ஒரே  இருசக்கரவாகனத்தில் மூன்று பேரும் வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதினர்.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த சோமேஸ்வரன் மற்றும் அவரின் நண்பர்கள் 2 பேர் சேர்த்து 3 பேரும் சம்பவத்தில் உயிர் இழந்தனர்.இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கியது விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவிக்கின்றனர். பின்னர் உயிரிழந்த 3 பேரின் உடலையும் 108 ஆம்புலன்ஸ்  மூலம் உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Categories

Tech |