Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பண்டிகை வரப்போகுது…. 3 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை…. அலைமோதிய வியாபாரிகள்….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுரோடு பகுதியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று ஹைதராபாத் உள்பட பல வெளி நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனையடுத்து தீபாவளிப் பண்டிகைக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இவற்றில் ஆடு ஒன்று அதிகபட்ச விலையாக 16 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் வழக்கத்தை விட வியாபாரம் சற்று குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |