சாம்ராஜ்நகர் மாவட்டம் சிவன சமுத்திரா கிராமத்தில் முனீர் அகமது என்பவர் வாசித்து வருகிறார். இவரது மனைவி தபசம்(26). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. வியாபாரியான அகமது அடிக்கடி வெளியூர் சென்று விடுவார் என்று கூறப்படுகிறது இந்நிலையில். தபசமுக்கு அதே பகுதியை சேர்ந்த அப்ரார் என்ற வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச அனுபவித்து வந்தனர். இதனை அறிந்த முனீர் இருவரையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தபசம் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளை உதறிவிட்டு கடந்த 17 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தனது கள்ளக்காதலுடன் ஓடிவிட்டார்.
இது பற்றி கொள்ளேகால் புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதில், மனைவி அவளுடைய கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாகவும், இருவரை கண்டித்து தருமாறு கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் அவர்கள் இரண்டு பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தபசம் தனது கள்ளக்காதலன் அப்ராருடன் கொள்ளேகால் நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.அப்போது தான் தன் கள்ளக்காதல் தான் செல்வேன் என்றார். தனது கணவர் மற்றும் குழந்தைகள் தனக்கு வேணாம் என்று தெரிவித்தார். போலீசார் எவ்வளவு அறிவுரை வழங்கியும் தபசம் கேட்கவில்லை. அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனையடுத்து போலீசார் விவாகரத்து பெறாமல் நீங்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அறிவுரை வழங்கினர். தான் தன்னுடைய கணவரை விவாகத்து செய்வதாக கூறிவிட்டு தன்னுடைய கள்ளக்காதலனுடன் போலீஸ் நிலையத்தில் இருந்து சென்று விட்டார்.