Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சாப்பாடு கூட தர மாட்டாங்க” வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ…. உறவினர்களின் கோரிக்கை…!!

பக்ரைன் நாட்டில் வேலை பார்ப்பதற்காக சென்று அங்கு துன்பப்படும் 3 பெண்களை மீட்டு தருமாறு உறவினர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் வடிவுக்கரசி, வள்ளி மற்றும் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் வேளாங்கன்னி ஆகிய பெண்கள் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த இந்தப் பெண்கள் தங்களது உறவினர் பெண்ணான கவிதா என்பவர் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் பக்ரைன் நாட்டிற்கு வீட்டு வேலை செய்ய சென்றுள்ளனர்.

இதனை அடுத்து வேலைக்கு சென்ற இடத்தில் தங்களை அடித்து துன்புறுத்துவதாக மூன்று பெண்களும் பக்ரைன் நாட்டு ஏஜென்சியிடம் கேட்ட போது அவர்கள் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கு வள்ளி வாட்ஸப்பில் அழுதவாறு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மூன்று பெண்களின் உறவினர்களும் பக்ரைன் நாட்டில் துன்பப்பட்டு வரும் வள்ளி, வடிவுக்கரசி, வேளாங்கன்னி ஆகியோரை மீட்டுத்தருமாறு வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குபதிந்த காவல்துறையினர் மூன்று பெண்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Categories

Tech |