சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டில் 3 லட்சம் உபகரணம் இந்தியா வந்துள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று இந்தியவில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொரோனாவுக்கு எதிராக அரசாங்கங்கம் எடுத்து வரும் நடவடிக்கை சம்பந்தமாக பல்வேறு விஷயங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில், சீனாவில் இருந்து கிட்டத்தட்ட 6 லட்சத்து 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆர்டர் செய்திருந்தோம். அது தற்போது இந்தியாவிற்கு வந்து இருக்கின்றது.
இதில் 3 லட்சம்ரேபிட் டெஸ்ட் கிட்கள் தயாராக இருக்கின்றது. மற்றவையின் தரம் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வழங்கப்படும். முதல் கட்டமாக தற்போது இருக்கும் 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை எதையையெல்லாம் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளாக கண்டறிந்துள்ளோமோ அவர்களுக்கு முதலில் அனுப்பி வைக்கப்படும். நாட்டின் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் வீடு வீடாக சென்று ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.