தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் படி கூட்டுறவு சங்கத்தலைவர் உறுப்பினர் தவறு செய்தால் மாவட்ட இணைப்பதிவாளரே சஸ்பெண்ட் செய்ய அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
மீன்வள பல்கலை சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதன்படி மீன்வள பல்கலை. துணை வேந்தரின் வயது வரம்பை உயர்த்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.