நிலுவையில் இருக்கின்ற ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று செவிலியர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் செவிலியர்கள் தங்களுக்கு 3 மாதமாக நிலுவையில் இருக்கின்ற ஊதியத்தை உடனடியாக வழங்குவதற்கு கலெக்டர் உத்தரவுவிட கோரி மனு கொடுத்துள்ளனர். மேலும் செவிலியர்கள் பணி நீட்டிப்பு செய்து தருமாறும் மனுவில் தெரிவித்துள்ளனர்.