Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 மாதங்களுக்கு முன்புதான் கட்டினோம்…. அதற்குள் நிரம்பி வழிகிறது…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

3 மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம், எல்லைக்கிராமம் மற்றும் எக்கட்டாம்பாளையம் போன்ற ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதியன்று தடுப்பணை கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சரான மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து 15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கீழ்பவானி வாய்க்காலின் உபரி நீரை தேக்கி வைக்கும் வகையில் கான்கிரீட் மூலமாக தடுப்பணை கட்டப்பட்டது.

அதன்பின் தொடர்ச்சியாக பெய்த மழையினால் தற்போது இந்த தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியபோது, “தடுப்பணை கட்டப்பட்டு 3 மாதங்கள் கூட நிறைவு ஆகாத நிலையில் தற்போது பெய்த மழையினால் தண்ணீர் நிரம்பி வெளியேறுவது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த தடுப்பணையின் மூலமாக அருகில் உள்ள கிணறுகளில் வறட்சி காலங்களில் கூட தண்ணீர் குறையாமல் இருக்கும்” என்று அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நிரம்பிய தடுப்பணையை சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரான டி.காயத்ரி இளங்கோ, புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் அ.பரமேஸ்வர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Categories

Tech |