திண்டுக்கல் அருகே 3 மாத சிசு குழந்தை இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் குப்பண்ணபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். அதே ஊருக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கலாவதி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சிவஸ்ரீ என்ற 2 வயது குழந்தையும் மோனிஷா என்ற மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளது.
சரவணன் பெங்களூர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருவதால் கலாவதி அவரது தாயார் வீட்டில் தங்கி குழந்தைகளை பராமரித்து வந்த நிலையில், மூன்று மாத குழந்தையான மோனிஷாவை கலாவதியின் தாயார்தான் எப்போதும் குளிக்க வைப்பார்.
அந்த வகையில் குழந்தையின் தாய் கலாவதி வெளியில் செல்ல அவரது தாய் மோனிஷாவை குளிக்க வைத்துள்ளார். அப்போது மூச்சடைத்து குழந்தை திடீரென பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது. பின்னர் குழந்தையை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடிய அவர் சிகிச்சைக்காக அனுமதித்து போது மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின் இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இது இயற்கை மரணமா? இல்லை சிசுக்கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.