Categories
தேசிய செய்திகள்

இன்னும் 3 மாதத்திற்கு ‘Work from Home’ தான்… மத்திய அரசு உத்தரவால் அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்..!

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடனாக ஆலோசனையில் ரவிசங்கர் பி்ரசாத் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது அதிகரித்தாலும் வங்கிகளில் பணத்தை செலுத்துவது போன்ற பரிமாற்றங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு மட்டும் இம்மாத இறுதி வரை தளர்வு அளித்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், இந்த தளர்வை வரும் ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை ஜூலை 31 வரை நீட்டிக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்த நிலையில் அதை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என கூறினார். கொரோனாவால் இந்தியாவில் மொத்தமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 22,010 தற்போது காரோணவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல, இதுவரை கொரோனாவில் இருந்து 7,027 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 36வது நாளாக அமலில் உள்ள நிலையில், மேலும் நீட்டிக்க பிரதமருக்கு மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் தெரிவித்ததை தொடர்ந்து ஜூலை மாதம் வரை ஊரடங்கு நீடிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |