Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கொரோனா தடுப்பு பணியில் இருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு…!!

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை திருவெற்றியூர், மாதவரம், தேனாம்பேட்டை மண்டலங்களின் சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தாய்கறித்து வந்த நிலையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அதில், ஏற்கனவே 3 மண்டலத்திற்கு அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் இன்று திருவொற்றியூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட காமராஜ் ஐஏஎஸ், மாதவரம் மண்டலத்திற்கு ஞானசேகரன், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு மணிகண்டன் ஆகியோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக திருவொற்றியூரில் சுதன், மாதவரத்தில் மோகன், தேனாம்பேட்டையில் பலாசுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சென்னை ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. கொரோனா தடுப்பு பணியில் இருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கருணாகரன், பெருங்குடிக்கு நியமிக்கப்பட்ட வெங்கடேஷ், ஆலந்தூருக்கு நியமிக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

மண்டலம் -1 ஆன ராயபுரம் பகுதிக்கு காமராஜ் ஐஏஎஸ் முன்னதாக நியமிக்கப்பட்டிருந்தார். விடுவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதில், ராயபுரம் மண்டலத்திற்கு பாலசுப்ரமணியம், ஆலந்தூர் மண்டலத்திற்கு நிர்மல் ராஜ், பெருங்குடி மண்டலத்தில் அனீஸ் சேகர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15வது மண்டலமான சோழிங்கநல்லூருக்கு விஷ்ணு ஐஏஎஸ், சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |