Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா ….!!

தமிழகத்தில் மேலும் இரு 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சற்று முன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியிட்டிருந்தார். அதில் டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்ப ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து விட்டதாகவும் , இன்னும் 2  நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் தற்போது வருந்தத்தக்க செய்தியாக தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் 23 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்ட்டாதல் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

63 வயதுள்ளவர் துபாயில் இருந்து வந்ததாகவும் ,  66 வயது ஆண் தாய்லாந்தை சேர்ந்தவர் என்றும், அதே போல 18 வயது நிரம்பிய இளைஞர் ஒருவருக்கும் நோய்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரும் தற்போது உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை 18 வயதான இளைஞருக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் , துபாயில் இருந்து வந்தவருக்கு வாலாஜா அரசு மருத்துவமனையிலும், தாய்லாந்து நாட்டை  சேர்ந்தவருக்கு பெருந்துறை மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |