நெல்லை மாவட்டத்தில் சலூன் கடை உரிமையாளர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 403ஆக உயர்ந்துள்ளது. மேலும் 345 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 53 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தென்காசியில் 5 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 111 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.