மனிதர்களை கொன்று அவர்களுடைய உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி சோப்பாகவும் கேக்காவும் செய்து சாப்பிட்ட சீரியல் கில்லர் பற்றி உங்களுக்கு தெரியுமா. 1884இல் இத்தாலியில் பிறந்த லியானார்டோ என்ற பெண்ணிற்கு மூடநம்பிக்கைகள் அதிகமாக இருந்ததினால் செட்டி, சோபி மற்றும் விர்ஜீனியா ஆகிய மூவரையும் கொன்று சாப்பிடக்கூடிய கேக்காவும் குளிக்கப் பயன்படுத்தும் சோப்பாகவும் மாற்றி இருக்கிறார். இதில் விர்ஜீனியா என்ற பெண்ணை கொலை செய்யும் போதுதான் போலீசார் இவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணையில் நீங்கள் எதற்காக தொடர்ச்சியாக கொலை செய்தீர்கள் என்று போலீசார் அவரிடம் கேட்டனர். அதற்கு லியானார்டோ கூறியதாவது “எனக்கு மூன்று முறை கருக்கலைப்பும் 10 முறை குழந்தைகள் பிறந்தும் இறந்திருக்கின்றது. இதற்கு காரணம் சாத்தான்கள் தான். இனி பிறக்கும் குழந்தைகளாவது நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே சாத்தான்களுக்கு நான் உயிர்பலி கொடுத்தேன்” என்று கூறியுள்ளார். இவர் கூறியதை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு காரணம் லியானார்டோ செய்த சோப் மற்றும் கேக்கை அக்கம் பக்கத்தினரும் சாப்பிட்டார்கலாம்.