Categories
உலக செய்திகள்

இதுதான் முதல்முறை…. மெக்சிகோவிற்கு 3 நாள் பயணம்…. ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர்கள்….!!

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மெக்சிகோ வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

மெக்சிகோவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக சென்றுள்ளார். இவர் வட அமெரிக்கா நாடு ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும். மேலும் இந்திய வெளியுறவுத் துறை மந்திரிகளில் கடந்த 41 ஆண்டுகளில் அங்கு சென்றிருப்பதும் இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மெக்சிகோ சிட்டியில் அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மார்செலோ எப்ரார்ட் கசாபனை இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார். அப்பொழுது வர்த்தகம், முதலீடு மற்றும் விண்வெளி உள்பட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் சர்வதேச மன்றங்களில்  இரு தரப்பும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்றுள்ளனர்.

Categories

Tech |