Categories
மாநில செய்திகள்

3 நாளில் சென்னை திரும்பும் ரஜினி… வெளியான முக்கிய தகவல்…!!!

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூன்று நாட்களில் சென்னை திரும்புவார் என முக.அழகிரி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அங்கு அனுமதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் நடிகர் ரஜினி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் முக.அழகிரி நலம் விசாரித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ரஜினி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். இரண்டு அல்லது மூன்று நாட்களில் சென்னை திரும்புவேன் என ரஜினி என்னிடம் கூறினார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |