விநாயகர் சிலை ஊரின் முக்கிய தெரு வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கிராமம் அருகில் உள்ள கிணற்றில் கரைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறம்பன் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை 3 நாட்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் பொன் ராஜேந்திரன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.
இதனையடுத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதன்பின் விநாயகர் சிலை ஊரின் முக்கிய தெரு வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கிராமம் அருகில் உள்ள கிணற்றில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி இசக்கிமுத்து. ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் பால்ராஜ், ஒன்றிய துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி தலைவர் சுடலைமாடன், ஊர் நாட்டாண்மைகள் லட்சுமணன், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.