Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு பின் …. திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் ….. ஏராளமான பக்தர்கள் வழிபாடு ….!!!

நாகை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை  கட்டுப்படுத்த வாரத்தின் கடைசி மூன்று நாட்களான வெள்ளி ,சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட தமிழக அரசு தடை விதித்தது .இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி  மாதா பேராலயம் ,வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் நாகூர் தர்கா உட்பட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி மூன்று நாட்களான 6,7,8 ஆகிய தேதிகளில் மூடப்பட்டது .

அத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று நாட்கள் கழித்து நேற்று நாகை மாவட்டத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது .இதனால் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் வருகின்ற 12-ஆம் தேதி வரை பக்தர்கள் பேராலயத்திற்குள்  பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது .இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |