Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 3 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா: முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு புதிதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 3 பேரும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலம் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது எனறு தான் சொல்ல வேண்டும். இதுவரை, 330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 116 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து இன்று 4 மாத குழந்தை ஒன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது. மலபுரத்தை சேர்ந்த 4 மாத குழந்தை நேற்று கொரோனா உறுதியானதை தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியாகியுள்ளது. கடந்த 3 மாதங்களாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தற்போது, கேரளாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. மகாராஷ்டிராவில் 6,430, குஜராத்தில் 2,624, டெல்லியில் 2,376, ராஜஸ்தானில் 1,964, மத்திய பிரதேசத்தில் 1,699 மற்றும் தமிழ்நாட்டில் 1,683 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |