புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். ஆனால் லோடு ஆட்டோவில் இருந்தவர்கள் காவல்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.
இதனையடுத்து அந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் சோதனை செய்ததில் 517 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் லோடு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் பண்டாரவிளை பகுதியில் வசிக்கும் ஏசுராஜா, இசக்கி ராஜா, சாந்தகுமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்கள் வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.