Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கேட்டதால்…. மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள்வெட்டு…. தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை….!!

மனைவி, மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்.

சேலம் மாவட்டத்திலுள்ள கோட்டை பகுதியில் சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு தமிழரசி குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே தமிழரசி ஆத்தூரில் உள்ள மகளிர் சுய உதவி குழு மூலம் சிவசுப்பிரமணிக்கு ரூ.40 ஆயிரம் பெற்று கொடுத்துள்ளார். இந்நிலையில் தமிழரசி கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி கணவரிடம் இருந்து பணத்தை வாங்குவதற்காக தனது தாய் தனலட்சுமி, தம்பி ராஜ்குமார் ஆகியோருடன் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்களுக்கும், சிவசுப்பிரமணிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளால் தமிழரசி, தனலட்சுமி, ராஜ்குமார் ஆகியோரை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தனலட்சுமி ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவசுப்பிரமணியை கைது செய்தனர். இதுசம்பந்தமான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயந்தி மனைவி, மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக சிவசுப்பிரமணிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்

.

Categories

Tech |