Categories
உலக செய்திகள்

“வாழ்க்கையில் Fun வேணும்”… 3 பேரை கொலை செய்த “சீரியல் கில்லர்” பெண்… மகளின் பரிதாப நிலை…!!

சீரியல் கில்லராக இருக்கும்  தாயை போல தானும் மாறிவிடுவேனோ என்ற பயத்தில் 13 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்தவர் Joanna Dennehy. இவர் பிரிட்டனில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரண்டு பெண்களில் ஒருவராவார். “சீரியல் கில்லர்” என்றழைக்கப்படும்  Joanna Dennehy 2013ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்குள் மூன்றுபேரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு உயிரிழந்தவர்களின் உடலை குழியில் வீசியுள்ளார்.

மேலும் Joanna Dennehy  கொடூரமாக கத்தியால் குத்தியும் இருவர் உயிர் பிழைத்துள்ளனர். மூன்று கொலைகள் செய்த குற்றத்திற்காக காவல்துறையினர்  Joanna-வை தனிப்படை அமைத்து கைது செய்தனர்.  இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில்  Joanna மற்றவர்களை கத்தியால் குத்தும் பொழுது எனக்கு சந்தோஷம் ஏற்படுகிறது என்றும் , Fun வேண்டும் என்பதால் நான் இவ்வாறு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் அவருக்கு 2014 ஆம் ஆண்டு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும் பொழுது 5 வயதில் Shianne Treanor  என்ற பெண் குழந்தை Joanna-விற்கு இருந்தது. தற்போது Shianne Treanor-க்கு  13 வயது ஆகி உள்ளது. தனது தாய் செய்த கொடூர கொலைகளை அறிந்துகொண்ட Shianne Treanor கதறி அழுதுள்ளார்.

பின்னர்,  நானும் என் அம்மாவை போல மாறி விடுவேனோ? என்று Shianne கேட்டுள்ளார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார்.  மேலும் தன்னால் யாரும் காயப்பட்டு விடக்கூடாது என்பதால் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனால் Shianne Treanor-க்கு  மனநல மருத்துவர்கள் முறையான ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

Categories

Tech |