கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள தும்மகுண்டு கிராமத்தில் அமைந்துள்ள முனுசாமி கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பழனிபட்டி பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி, ராஜ்குமார், பாலகிருஷ்ணன் 3 வாலிபர்கள் இணைந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 13 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.