Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீர்னு கண் அசந்துட்டு…. குடிசைகளுக்குள் புகுந்த லாரி…. விசாரணையில் காவல்துறையினர்….!!

குடிசை வீடுகளுக்குள் லாரி புகுந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் பகுதிக்கு எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஐயப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இந்த லாரி கரம்பத்தூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சேகர், குமார், கமன் ஆகியோரது குடிசை வீடுகளுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோகிலா, குமார், கோகுல்நாத் ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை  மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் லாரி டிரைவர் தூங்கியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |