Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற வாலிபர்கள்…. உடைக்கப்பட்ட பேருந்து கண்ணாடி… போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை தேசிங்கு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பேருந்தை முந்தி செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் பேருந்து டிரைவர் அவர்களுக்கு வழி விடவில்லை. இதனால் கோபமடைந்த வாலிபர்கள் பெரியகாட்டுபாளையம் பகுதியில் வைத்து பேருந்தை முந்திச் சென்று மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தி வழிமறித்தனர். அதன்பிறகு அந்த வாலிபர்கள் சாலையோரம் இளநீர் வியாபாரி வைத்திருந்த கத்தியை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததோடு, தேசிங்கை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர்கள் பெரிய காட்டுபாளையம் பகுதியில் வசிக்கும் பிரிதிவிராஜன், சீனிவாசன் மற்றும் மருதநாயகம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் வாலிபர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |