சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல் துறையினர் காயல் பட்டணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் மூன்று பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான முகைதீன் அஸ்ரப், அப்துல் காதர், அப்துல் கபூர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 12 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.