3 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சாவடி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரை கட்ட பஞ்சாயத்து வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்து பெண்ணின் சாவிற்கு காரணமான கிருஷ்ணவேணி என்பவரையும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் புரட்சி தமிழன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.