9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள டி.பி சத்திரம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் குளிர்பான கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பெருமாளுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 30 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து பண ஆசை காட்டியும், மிரட்டியும் அந்த பெண்ணின் 9 வயது மகளுக்கு பெருமாள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
மேலும் சிறுமியுடன் விளையாடுவதற்கு வந்த 11 வயதுடைய மற்றொரு சிறுமி மற்றும் 4 வயது பெண் குழந்தைக்கு பெருமாள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெருமாள், 30 வயது பெண், உடந்தையாக இருந்த பெண்ணின் சகோதரி போன்றோரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.