சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக லாரி கிளீனர் உள்பட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் என்ற கிராமத்தில் சென்னப்பன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னப்பன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியை காணவில்லை என பல இடங்களில் தேடிய பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சென்னப்பன் உள்பட மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.