மெக்சிகோ நாட்டில் 3 நபர்களுக்கு புளோரோனா என்ற புதிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று, டெல்டா, காமா மற்றும் ஒமிக்ரான் என்று பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவியது. இந்நிலையில் தற்போது. புளோரோனா என்ற புதிய தொற்று சமீபத்தில் உருவானது.
உலக நாடுகளிலேயே முதல் தடவையாக இஸ்ரேலில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு இந்த புளோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் மூன்று நபர்களுக்கு புளோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.