பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்ததில் காவல்துறையினர் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் குவெட்டா பகுதியின் பாத்திமா ஜின்னா சாலையில் திடீரென்று சமூகவிரோதிகள் சிலரால் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு கடை தீப்பற்றி எரிந்துவிட்டது. அதன்பிறகு, உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். இந்த பயங்கர விபத்தில் காவல்துறையினர் மூவர் பலியானதாகவும் 25 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் ர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது