பாகிஸ்தான் நாட்டில் ராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்த முத்தாகிட குவாமி அரசியல் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மூவர் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
முத்தாகிட குவாமி இயக்கம் என்னும் அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மூவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அதன்பின், அவர்கள் ஏழு வருடங்களாக எங்கே இருக்கிறார்கள்? என்ற தகவல் தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்து அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர்.
இந்நிலையில், அவர்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில் இறந்த நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உடலில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட தழும்புகள் இருந்திருக்கின்றன. அவர்கள் மூவரையும் துணை இராணுவ படையைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரி த்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
இதில், இர்பானின் குடும்பத்தினர் பல வருடங்களாக நீதிமன்றத்திற்கு சென்று கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இர்பான் உட்பட மூவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு வெவ்வேறு பகுதிகளில் வீசப்பட்டிருந்தது தெரிய வந்ததால், மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள்.