ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்து வசூலித்தனர்.
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனாவை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசின் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் பால் கடை, மருந்து கடை ஆகியவை தவிர மீதம் உள்ள கடைகள் அனைத்தும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த விதிமுறையை மீறி யாரேனும் செயல்படுகின்றனரா என்பதை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியில் மளிகை கடை, முட்டை கடை, ஜெராக்ஸ் கடை ஆகிய மூன்று கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வந்துள்ளது. இதனை கண்ட ரோந்து சென்ற காவல்துறையினர் கடையின் உரிமையாளரை எச்சரித்ததுடன் மூன்று கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் மூன்று கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்துள்ளனர்.