Categories
உலக செய்திகள்

கீழே விழுந்து விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. வீரர்கள் மூவர் உயிரிழந்த பரிதாபம்…!!!

நைஜரில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரிய நாட்டின் ராணுவத்திற்குரிய மில் எம்ஐ-17 என்ற வகை ஹெலிகாப்டர் நைஜர் நாட்டின் நியாம் என்னும் நகருக்கு புறப்பட்டு சென்றிருக்கிறது. அதில் ராணுவ வீரர்கள் மூவர் இருந்திருக்கிறார்கள்.

அந்நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திற்குள் விழுந்து தீப்பற்றி எரிந்தது.

அதனைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்த தீயணைப்புப்படையினர் தீயை விரைவாக அணைத்து விட்டனர். இருப்பினும் இந்த பயங்கர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த வீரர்கள்  மூவருமே உடல் கருகி பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |