சுவிட்சர்லாந்தில் காவலில் இருந்த இலங்கை தமிழ் புகழிட கோரிக்கையாளர்கள் மூவர் பலியானதை தொடர்ந்து கட்டாயமாக தமிழர்களை நாடு கடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் பேரணி நடத்திவருகிறார்கள்.
பேசல் நகரிலிருக்கும் நாடு கடத்தும் சிறையான Bässlergut-க்கு முன்பாக மக்கள் பதாகைகளோடு நின்று தமிழ் மக்களை சுவிசர்லாந்து அரசு நாடு கடத்துவதை எதிர்த்து முழக்கமிட்டனர். இலங்கையுடன் சுவிட்சர்லாந்து அரசும் சேர்ந்து அநியாயமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சிறை காவலிலிருந்து மூன்று தமிழ் புகழிட கோரிக்கையாளர்கள் பலியானதை தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய உயிரிழப்புகள் சுவிட்சர்லாந்து நாட்டின் புகலிடம் மற்றும் புலம்பெயர்தல் கொள்கையின் கொடூரத்தை காட்டுவதாக உள்ளது என்று போராட்டக்காரர்கள் கூறியிருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து சிறையில் பலியானவர்கள் இந்த மூவர் மட்டும் கிடையாது என்று கூறிய அவர்கள் இது பற்றிய விளக்கமான புள்ளி விவரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். எனினும் அனைத்து வழக்கையும் ஒவ்வொன்றாக கையில் எடுப்போம். அதற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று கூறியிருக்கிறார்கள்.