நாடு கடத்தலின் போது பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவாமல் இருந்ததால் மேலும் மூன்று பாதுகாவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திலிருந்து அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த அகதிகளில் நிறைமாத கர்ப்பிணியாக ஒரு பெண் இருந்துள்ளார். அவர் நாடு கடத்தலில் போது பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஸ்விச் எல்லை பாதுகாவலர்கள் மருத்துவ உதவி ஏற்பாடு செய்யவில்லை. இதனையடுத்து நாடு கடத்தலுக்கு பின் இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் அந்த கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு குழந்தை இறந்து பிறந்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தலைவருக்கு உடல் ரீதியாக ஊறு விளைவித்தல் குற்றத்திற்காக ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் மேலும் 3 பாதுகாவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது அவர்கள் மூன்று பேரும் மேல் அதிகாரியின் உத்தரவை மீறி ஆம்புலன்ஸுக்கு அழைப்புக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அதனால் இந்த வழக்கில் நீதிபதிகள் அவர்கள் மூவரையும் சேர்த்துள்ளனர்.