நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகரசபையை அ.தி.மு.க 3-வது முறையாக தக்க வைத்துக் கொள்ள தயாராகி வருவதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 1962-ஆம் வருடம் தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 11.64 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இந்த பேரூராட்சி 1993-ஆம் வருடம் அ.தி.மு.க ஆட்சியின் சிறப்பு நிலை பேரூட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்பின் 2004-ஆம் வருடம் 21 வார்டுகளுடன் 3-ஆம் நிலை நகராட்சியாக உருவான இம்மாவட்டம் 2010-ஆம் வருடம் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்த நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இதில் 1, 2, 3, 6, 11, 13, 15, 17, 19 ஆகிய 9 வார்டுகள் பொதுபிரிவினருக்கும், 4, 5, 7, 10, 12, 14, 16, 18, 20 ஆகிய 9 வார்டுகள் பெண் பிரிவினருக்கும் 8, 21 ஆகிய 2 வார்டுகள் எஸ்.சி பெண் பிரிவினருக்கும், 9-வது வார்டு எஸ்.சி பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இவை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு 2 முறை நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இம்மாவட்ட நகரசபையை அ.தி.மு.க-வை கைப்பற்றியுள்ளது. எனவே கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க-வை சேர்ந்த அழகுவேல் பாபுவும், 2011-ஆம் வருடம் முதல் 2014-ஆம் வருடம் வரை அ.தி.மு.க-வை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரும் நகரசபை தலைவராக பதவி வகித்து வந்துள்ளனர். பின்னர் 6 வருடங்களுக்கு பின் தற்போது நடைபெறுகின்ற தேர்தலில் இம்மாவட்ட நகரசபை தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க தலைநகரில் இருக்கின்ற நகரசபையை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறது.
இதேபோல் ஏற்கனவே 2 முறை தங்கள் வசம் இருந்த கள்ளக்குறிச்சி நகரசபையை தொடர்ந்து 3-வது முறையாக கைப்பற்றும் நோக்கில் அ.தி.மு.க-வும் தயாராகி வருவதால் நகராட்சி தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மாவட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நவீன வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், கடைவீதி, குளத்து மேட்டு தெரு, எம்.ஆர்.என். நகரில் உள்ள ஜோதி அவென்யு தெரு மற்றும் ராஜாம்பாள் நகர் உள்ள பல தெருக்களில் சிமென்ட் அல்லது தார் சாலை அமைத்து தர வேண்டும், நூலகத்திற்கு சொந்தமான கட்டிடம் கட்ட வேண்டும் எனவும், பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும். நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் எதிர்பார்பாக இருகிறது.