இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 5 அறிமுக வீரர்கள் களமிறங்குகின்றனர் .
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலமையிலான 2-தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்ந்தெடுத்துள்ளது.
பிளேயிங் லெவேன் :
இந்திய அணி :
ஷிகர் தவான்(கேப்டன்) பிருத்வி ஷா சஞ்சு சாம்சன் மனீஷ் பாண்டே சூர்யகுமார் யாதவ் நிதீஷ் ராணா ஹார்டிக் பாண்ட்யா கிருஷ்ணப்ப கெளதம் ராகுல் சாஹர் நவ்தீப் சைனி சேதன் சகரியா இலங்கை அணி: தசுன் ஷானகா(கேப்டன்) அவிஷ்கா பெர்னாண்டோ மினோட் பானுகா பானுகா ராஜபக்ஷ தனஞ்சய டி சில்வா சரித் அசலங்கா ரமேஷ் மெண்டிஸ் சாமிகா கருணாரத்ன அகில தனஞ்சயா துஷ்மந்தா சாமிரா பிரவீன் ஜெயவிக்ரமா