Categories
கிரிக்கெட் விளையாட்டு

3-வது டெஸ்டில் அஸ்வின் இடம் பெறுவாரா …? கேப்டன் விராட் கோலியின் பதில்…!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது .

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது . இதில் முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது .இதையடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் 3-வது டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது . அதேசமயம் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடரை சமன் செய்யும் முனைப்பில் இருக்கிறது. இந்நிலையில்  முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இடம் பெறவில்லை.

ஆடுகளம்  வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணி 4 வேகப்பந்து வீரர்களுடன் களமிறங்கியது .இதனால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா என கேப்டன் விராட் கோலிடம் கேள்வி கேட்டபோது அவர் கூறியதாவது,” தற்போது அணியில் மாற்றம் செய்யப்படுவதற்கு  எந்த காரணமும் இல்லை .2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற அணி சிறந்தது .இதனால் வெற்றி நிறைந்த பணியில் மாற்றம் செய்து தொந்தரவு செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள். இதில் அஸ்வின் இடம் பெறுவாரா என்பதில்  எதுவும் நடக்கலாம் .ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே எல்லாம் உள்ளது. நாங்கள் சமபலத்துடன் விளையாடுவோம்” இவ்வாறு கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

Categories

Tech |