சென்னையில் தன்னுடைய மூன்றாவது மனைவியின் போட்டோ, புகைப்படங்களை வைத்து மிரட்டிய பணக்கார கணவன் பற்றி அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த 40 வருடங்களாக தோல் வியாபார தொழிலில் ஈடுபட்டு பீகாரை சேர்ந்த கோடீஸ்வர குடும்பத்தின் இளைய மகன் சபீக் அகமது. இவர் சில வருடங்களுக்கு முன் இரண்டு முறை திருமணம் செய்து ,அந்த இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துள்ளார். இதன் பிறகு மூன்றாவதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா குடியுரிமை உள்ள ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணை 3 வதாக திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கும் இது 3 வது திருமணமாகும். கணவர் சபிக் தன் மனைவியுடன் தனிமையில் இருக்கும் நிலையிலுள்ள போட்டோக்கள் புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இந்த சூழலில் அவர் மனைவி கர்ப்பமாக இருந்தார். ஆனால் கணவர் சபிக் மனைவியிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு வற்புறுத்தி ,மனைவியின் கர்ப்பத்தை கலைத் துள்ளார். இதனால் மனைவி கணவரின் வற்புறுத்தல் காரணமாக தன்னுடைய கர்ப்பத்தை கலைத்தார் . ஆனால் தொடர்ந்து சைக்கோ தனமான கொடுமைகளை கணவர் கொடுத்துள்ளார். இதன் காரணமாக கணவரின் கொடுமைகளை தாங்க முடியாமல், மனைவி போலீசில் புகார் அளித்துவிட்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் காரணமாக கணவர் சபிக் கோபமடைந்து மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறும் , அப்படி வராவிட்டால் தனிமையிலிருந்த புகைப்படம் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவிக்க, அவரைப் பழிவாங்க வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தனிமையில் இருந்த புகைப்படத்தை வைத்துள்ளார் கணவர் சபிக். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி ,இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், சபிக் முன்பு திருமணம் செய்த இரண்டு பெண்களையும் இதேபோன்று வீடியோ மற்றும் போட்டோக்களை காட்டி சைக்கோ தனமான கொடுமைகளை கொடுத்து வந்தது தெரிந்தது. இதன் காரணமாக அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.