திருவாரூர் மாவட்டத்தில் மூன்று வயது பெண்குழந்தைக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மிக அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி பெண்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் காமவெறி கொண்ட கயவர்கள் பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் செவ்வந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாரிசூசை வயது 72. தன் வீட்டிற்கு அருகில் உள்ள 3 வயது பச்சிளம் குழந்தையை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.இதனால் கோபம் அடைந்த பெற்றோர் கடந்த 2019 இல் இதனைப்பற்றி நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாரிசூசையை கைது செய்து போலீஸ் பெண்கள் பாதுகாப்புக்கு எதிரான “போக்சோ “சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.பின்னர் இந்த வழக்கு திருவாரூர் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக மல்லிகா ஆஜரானார். விசாரணையில் குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்து உறுதியாக்கப்பட்டது.பிறகு இந்த வழக்கில் மாரிசூசைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் வழங்கி மகிளா கோர்ட் நீதிபதி சுந்தர்ராஜன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.