எலி பேஸ்ட் சாப்பிட்டு 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் புதுச்சேரியில் தியா என்ற 3 வயது குழந்தை சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 3 வயது குழந்தையான தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் எலி பேஸ்ட்டை தடைசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.