கேரளாவின் கொரோனா 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் உள்ள 3 பேருக்கு கண்டறியப்பட்டது. பிறகு அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு வீடு திரும்பினர். இதையடுத்து தான் கொரோனா வைரஸ் மேலும் 5 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார். இந்தியாவின் பல பகுதியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கியது. தற்போது வரை இந்தியாவில் 35க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு , தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜா தெரிவித்துள்ளார். இத்தாலியில் இருந்து திரும்பிய 5 பேரின் ரத்த மாதிரிகள் புனேவில் ஆய்வு செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டடுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பத்தினம்திட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் முழுமையாக வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே சைலஜா கூறி இருந்தார். பாதிக்கப்பட்ட 5 பேரில் 3 வயது குழந்தையும் ஒன்று என தெரியவந்துள்ளது. பாதிப்பு உறுதியான 3 வயது குழந்தைக்கு எர்ணாகுளம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.