தாய்வான் நாட்டில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 3வயது சிறுமியை பட்டம் தூக்கிச்சென்ற சம்பவம் காண்போரை பதறவைத்தது.
தைவான் நாட்டில் புகழ் பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. அந்நாட்டின் நான்லியோ கடற்கரையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் பட்டமிட்டு மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டத்தின் வால் சிக்கிய 3 வயது சிறுமி பட்டத்தோடு மேலே பறந்து சென்றது அனைவரையும் அதிர வைத்தது. காண்போரின் நெஞ்சை அதிர வைத்த இந்த சம்பவத்தில் சிறுமி 100 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
காற்றில் பட்டம் மேலே எழும்ப வாலில் சிக்கிக் கொண்ட சிறுமி அலறிய நிலையிலும், பட்டத்தின் வாலை விடவில்லை. பட்டத்தின் வால் சிறுமியை ஒரு சுற்று சுற்றிய பின் தரையை நோக்கி பாய… காத்திருந்த மக்கள் சிறுமியை பத்திரமாக பிடித்துக்கொண்டனர். சிறிய அளவில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டதால் சிறுமி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து பட்டம் விடும் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.