Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை” கல்லூரி மாணவர்கள் போராட்டம்!!

ஜம்மு-காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டதையடுத்து  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா (Bandipora) மாவட்டத்தின் அருகே உள்ள சும்பல் (Sumbal) பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்ரீநகரைச் சேர்ந்த இரு கல்லூரிகளின் மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்து போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்தனர்.

Image result for In Jammu and Kashmir, three students were sexually abused by college students

இதனால்  இரு தரப்புக்கும் இடையே கடுமையான  மோதல் ஏற்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததால் போலீசார்  கண்ணீர் புகை குண்டுகளை வீசி கல்லூரி மாணவர்களை  கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது கல்லூரி மாணவர்களும் பதில் தாக்குதலாக  போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதேபோல பெமினா டிகிரி கல்லூரி (Bemina Degree College) என்ற மற்றொரு கல்லூரியிலும் போராட்டம் நடைபெற்றது.

Categories

Tech |