Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 வயது சிறுமிக்கு நடத்த கொடுமை… 4 வருட வழக்கு… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…

தேனி மாவட்டத்தில் 4 வருடங்களாக நடைபெற்று வந்த சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியில் தர்மர்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் தொழிலாளியான இவர் கடந்த 2017ஆம் ஆண்டில் 3 வயது பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சின்னமனூர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று இதற்கு இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு நேற்று தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும் இறுதி விசாரணை முடிந்த பின்பு 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை குடுத்த தர்மருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டு சிறுமிக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தற்போது தர்மரை காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |