Categories
உலக செய்திகள்

தந்தை செய்த காரியம்… தாயை கொன்ற 3 வயது குழந்தை… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமையன்று 3 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கியால் தாயை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் என்ற பகுதியின் டால்டன் நகருக்கு ஷாப்பிங் சென்ற டீஜா பென்னட் என்ற 22 வயது இளம்பெண், தன் 3 வயது மகனை வாகனத்தின் பின்புற இருக்கையில் அமர வைத்துவிட்டு, வாகனத்தை ஓட்ட தயாராக இருந்தார். அப்போது அச்சிறுவன் அருகிலிருந்த தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, தவறுதலாக துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த டீஜா பென்னட்டின் முதுகுப்பகுதியில் பாய்ந்தது. இதில் அவர் பலியானார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில், டீஜா பென்னட்டின் கணவர் ரோமல் வாட்சன் (23) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சட்டவிரோதமான முறையில், பாதுகாப்பில்லாமல் துப்பாக்கியை வாகனத்தில் வைத்துள்ளதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |